27 April 2024
#දේශීය

මහජන චීනයෙන් මෙරට හමුදාවට සයිනොෆාම් එන්නත් 300,000 ක්

මහජන චීන ජනරජයෙන් ශ්‍රී ලංකා ආරක්‍ෂක හමුදාවන් සඳහා ලැබුණු සයිනොෆාම් එන්නත් මාත්‍රා 300,000 ක තොගය අද (28) කටුනායක බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපලේදී ආරක්‍ෂක ලේකම් ජෙනරල් කමල් ගුණරත්න (විශ්‍රාමික) මහතා වෙත ශ්‍රී ලංකාවේ චීන තානාපති කාර්යාලයේ ආරක්‍ෂක උපදේශක ජ්‍යෙෂ්ඨ කර්නල් වැන් ඩොන්ග් නිල වශයෙන් ලබා ගන්නා ලදි.

මෙහිදී ආරක්‍ෂක ලේකම් පැවසුවේ, මෙම එන්නත් හමුදා සාමාජිකයින්, ආබාධිත හමුදා සාමාජිකයින්, රණවිරුවන්ගේ වැන්දඹුවන්/ ඔවුන්ගේ යැපෙන්නන්ට සහ විශ්‍රාමික රණවිරුවන් හට ලබාදීමට අපේක්‍ෂා කරන බවයි.

මේ වන විටත් හමුදා සාමාජිකයින් විශාල සංඛ්‍යාවක් එන්නත් කර ඇති හෙයින් ඉතිරි එන්නත් තොගයෙන් කොටසක් සාමාන්‍ය ජනතාවට ලබාදීමට පහසුකම් සලසාදිය හැකි බවට ද හෙතෙම පැවසිය.

ආරක්‍ෂක මාණ්ඩලික ප්‍රධානී සහ යුද හමුදාපති ජෙනරල් ශවේන්ද්‍ර සිල්වා, නාවික හමුදාපති වයිස් අද්මිරාල් නිශාන්ත උළුගේතැන්න, ගුවන් හමුදා මාණ්ඩලික ප්‍රධානී එයාර් වයිස් මාෂල් ප්‍රසන්න පායෝ සහ ආරක්‍ෂක අමාත්‍යංශයේ නිලධාරීන් මේ අවස්ථාව සඳහා සහභාගී වුහ.

 

 

 

 

 

 

Defence Secretary received 300,000 Sinopharm vaccine doses from China at BIA

Defence Secretary Gen. Kamal Gunaratne (Retd.) officially received a consignment of 300,000 doses of Sinopharm vaccine meant for Sri Lankan Armed Forces from the Chinese Defence Attaché in Sri Lanka Senior Colonel Wan Dong at the Bandaranaike International Airport (BIA), Katunayake today (28 Aug).

Responding to the media during the event, the Defence Secretary said service personnel, their families and ex-servicemen are expected to be vaccinated with the receipt of this consignment. 

“Since a greater number of service personnel have been vaccinated as of now, the general public could also be facilitated using the balance amount”, he pledged.

Meanwhile, Gen. Gunaratne extended his gratitude to the Government of the People’s Republic of China (PRC), Chinese Ministry of National Defence and the Defence Minister for the timely supportive measure.    

Recalling the remarkable long standing relationship maintained by the two countries, Senior Col. Dong said “Chinese people won’t hesitate to extend their supportive hands in difficult times for Sri Lankans”.

This consignment of the vaccine is to combat the COVID-19 pandemic through solidarity, he added.    

The Chinese Ministry of National Defence donated the consignment of vaccine following a request made by Gen. Gunaratne to the Chinese Defence Minister General Wei Fenghe, during his official visit to Sri Lanka in April this year.

Gen. Gunaratne pointed out this necessity during the bilateral discussion held between two officials, to strengthen Sri Lankan Armed Forces since they are performing a dedicated role in combating the coronavirus spread, at the forefront.

The Sinopharm vaccine arrived in a SriLankan Airlines flight today is a Military Assistance to the Sri Lankan Armed Forces from PRC. The relevant documents were also signed by two officials culminating the event. 

The occasion organized at BIA was held adhering to the healthcare guidelines to contain the virus spread.   

Chief of Defence Staff and Army Commander Gen. Shavendra Silva, Navy Commander Vice Admiral Nishantha Ulugetenne, Air Force Chief of Staff Air Vice Marshal Prasanna Payo and Sri Lankan Defence Ministry Officials were also present at the occasion.

 

 

 

 

 

 

 

சீனாவிடமிருந்து மூன்று இலட்ச தடுப்பூசிகளை பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பேற்றார்

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28,ஆகஸ்ட்) காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது ஊடகங்களுக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் :- இந்தத் தடுப்பூசிகள் படைவீரர்கள், படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை வீரர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அதிக எண்ணிக்கையிலான படைவீரர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதனால் படைவீரர்களுக்கு மேலதரிகமாக எஞ்சிய தொகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தேவையான தருணத்தில் ஆதரவுக்கரம் நீட்டிய சீன மக்கள் குடியரசிற்கும், சீன தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன இதன்போது நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் டோங் கருத்து தெரிவிக்கையில் : –  இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நீண்டகால உறவு காணப்படுவதுடன், இலங்கையர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் சகல சந்தர்பங்களிலும் சீன மக்கள் தங்கள் ஆதரவு கரங்களை நீட்ட ஒருபோதும் தயங்க மாட்டார்கள்” என்றார்.

இந்த தடுப்பூசி தொகுதிகள் கொவிட்-19 தொற்றுநோயை ஒற்றுமையின் மூலம் எதிர்த்துப் போராடுவதற்கு வழங்கப்பட்டதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்  இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு)  விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் பெரும் பங்கு வகிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய சீன மக்கள் குடியரசினால் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ ஒத்துழைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள மேற்படி ஒரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளது. இதன் போது மேற்படி தடுப்பூ வழங்கல் தொடர்பான ஆவணங்களில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரக பாதுகாப்பு இணைப்பாளர் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *